27. நமிநந்தியடிகள் நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 27
இறைவன்: வன்மீகநாதர்
இறைவி : உமாமகேஸ்வரி
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : திருநெய்ப்பேர்
முக்தி தலம் : திருவாரூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி - பூசம்
வரலாறு : சோழ நாட்டில் ஏமப்பேறுர் என்னும் தலத்தில் அவதாரம் செய்தார். சிவத்தொண்டிலும் சிவனடியார் தொண்டிலும் சிறந்தார். தினமும் திருவாரூர் பெருமான் கோயிலில் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் விளக்கெறிக்க எண்ணெய் இல்லாமல் சமணர் வீடுகளில் சென்று எண்ணெய் கேட்டார். அதற்கு அவர்கள் உங்கள் கடவுளின் கையிலேயே நெருப்பு இருக்கும்போது விளக்கு எதற்கு என்று கேலியாகப் பேசினர். வேண்டுமென்றால் குளத்து நீரைக் கொண்டு விளக்கெரியும் என்று கூறினர். நாயனார் மனம் மிக வருந்தினார். நீரைக் கொண்டே அவர் விளக்கெரிக்க விளக்குகளும் விடிய விடிய எரிந்தன. ஒரு சமயம் திருவாரூர் திருவிழா கண்டு அங்கே கூட்டத்தில் பலரைத் தொட்டதால் தீட்டு ஏற்பட்டுவிட்ட்தாகக் கருதி அன்று இரவு வீட்டிற்குள் செல்லாமல் வீட்டிற்கு வெளியே படுத்தார். அப்போது இறைவன் அவரது கனவில் திருவாரூர் பிறந்தார் அனைவரும் சிவகணங்களே என்று கூறி மறைந்தார். நாயனாரும் தம் குற்றத்தை உணர்ந்து எல்லோரையும் சிவகணங்களாகப் பார்த்தார்.
முகவரி : அருள்மிகு. வன்மீகநாதர் திருக்கோயில், திருநெய்ப்பேர் (வழி-திருவாரூர்)– 610001 திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : தொலைபேசி : ?

இருப்பிட வரைபடம்


நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல் உடன் 
அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால் 
பண்ணுந் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் 
எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார்

- பெ.பு. 1878
பாடல் கேளுங்கள்
 நண்ணி இறைஞ்சி


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க